2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர்பற்றில் நடமாடும் சேவை

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், ஏறாவூர்பற்று கோட்டத்துக்கான நடமாடும் சேவை, கரடியனாறு மகா வித்தியாலயத்தில். இன்ற (26)  நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில், அதிபர், ஆசிரியர்களது சம்பள முரண்பாடு, சுயவிவரக் கோவை, சம்பள நிலுவை, காப்புறுதி, பெயர் மாற்றம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இச் சேவை தொடங்கப்பட்டது.

வலயத்துக்கும் பாடசாலைக்கும் இடையில் உள்ள அதிக தூரம் காரணமாக வலயத்துக்குச் சென்று தமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் அதிபர், ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், கோட்டத்திலேயே அச்சேவையை வழங்கும் பொருட்டு இந்நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X