2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏழைக் குடும்பங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 27 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிச்நகர் கிராமத்தில்; வாழ்கின்ற ஏழைக் குடும்பங்களுக்கு உதவுமாறு அக்கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோருக்கு இன்று திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளதாக மேற்படி  சங்கத்தின்; செயலாளர் ஏ.எச்.ஆமினா உம்மா தெரிவித்தார்.

அக்கடிதத்தில், 'மிச்நகர் கிராம மக்கள் கடந்த யுத்தம் மற்றும் இயற்கை அழிவினாலும் பாதிக்கப்பட்டவர்கள். இந்தக் கிராமத்தில் உள்ள அதிகளவானோர் வறுமைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர்.

இங்கு 248 கைம்பெண்களும் 78 அநாதைகளும் உட்பட வீட்டு வசதியின்றி  216  குடும்பங்களும் உள்ளனர்.

இப்பொழுது புனித றமழான் நோன்பு அனுஷ்டிக்கப்படுவதால் இந்தக் கிராமத்து மக்களுக்கு உதவி அத்தியாவசியமாகின்றது. எனவே, உலர் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுத்தருவதற்கு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X