2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவின் வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் வழங்கின​ர்

கனகராசா சரவணன்   / 2017 நவம்பர் 08 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது விண்ணப்பங்களை, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரனிடம் கையளிக்கும் நிகழ்வு, கல்லடியிலுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது

இதில் கட்சியின் மாவட்ட முகாமையாளர் ச.விவேஸ்வரன் (கார்திக்), மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சி.மாசிலாமணி, கல்குடா தொகுதி அமைப்பாளர் ஜெகன், எறாவூர் பிரதேச அமைப்பாளர் சி.சிவநேசராசா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது, விண்ணப்பங்களைப் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து,  புதிய தேர்தல் முறை தொடர்பாகவும்  மாவட்டத்தில் 144 வட்டாரத்தில் 146 வேட்பாளர்களைத் தெரிவுசெய்தற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது நியமிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .