2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து வர்த்தகர்கள் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் பாவனைக்குதவாத பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஐந்து வர்த்தகர்கள் புதன்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 06 நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், பாவனைக்குதவாத உணவுப்பொருட்களையும் அசுத்தமான சமையல் பாத்திரங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் நேசதுரை தேவநேசன் தெரிவித்தார்.

சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைய நகரிலுள்ள  ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பழக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றில்  திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X