2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கவுள்ள 3,000 வீடுகளில் கணிசமானவை கிழக்கில் அமைக்கப்படும்: டேவிட் டாலி

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், யூ.எல். மப்றூக்

ஐரோப்பிய ஒன்றியம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3,000 வீடுகளில், கணிசமானவற்றினை கிழக்கு மாகாணத்துக்கு வழங்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் உறுதியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை(04) கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, டேவிட் டாலி இந்த உறுதிமொழியினை வழங்கினார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் இம்முறை இலங்கைக்கு ஒதுக்கிய 500 கோடி ரூபாயில், கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கா 150 கோடி ரூபாயை வழங்குவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி வழங்கும் என்றும் டேவிட் டாலி தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .