Princiya Dixci / 2021 மார்ச் 25 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை, இன்று (25) அதிகாலை 12 மணியளவில் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
லொயிஸ் அவனியூர் வீதியில், வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞனை நிறுத்தி சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன், அவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலைமீன்முடு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago