Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கிராமத்தில் 9 வயதுச் சிறுமியொருவர், ஒரு நாள் பீடித்த காய்ச்சலால் மரணமடைந்துள்ளாரென, சந்திவெளி பிரதேச வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாலையடித்தோணா - 9ஐச் சேர்ந்த அற்புதன் கிதுஷா எனும் சிறுமியே மரணித்துள்ளார்.
இச்சிறுமிக்கு, சனிக்கிழமை (16) கடும் காய்ச்சல் வந்ததையடுத்து, உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகலளவில் சிறுமிக்கு காய்ச்சல் குறைந்திருந்த போதும் வாந்தி, குமட்டல், ஏற்பட்டதோடு, வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் சளி வெளிவந்ததோடு சிறுமி சோர்வடைந்து மயக்கமாகிய நிலையில் உடனடியாக மீண்டும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், செல்லும் வழியிலேயே, சிறுமி உயிரிழந்துள்ளார்.
சடலம், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சிறுமின் தாயாரான கிருபைராணி (கைம்பெண்), வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்குச் சென்றுள்ள நிலையில், பாட்டியின் பராமரிப்பிலேயே சிறுமி இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினம் காலையில் சிறுமி நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழங்களை எடுத்து உண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .