Princiya Dixci / 2021 மே 26 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (25) மாத்திரம் 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், மேலும் 05 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 05 பேர் உட்பட மொத்தமாக 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் மாத்திரம் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மாத்திரம் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,
கொவிட் 19 மூன்றாவது அலையில் 7 நாட்களில் 424 தொற்றாளர்கள் மட்டக்களப்பில் இனங்கானப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
37 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
40 minute ago
55 minute ago