Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூன் 16 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதன் தவிசாளராக முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் இன்று(16) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்யும் அமர்வு இன்று திங்கட்கிழமை (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ், அமர்வின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தமது ஆதரவினைத் தெரிவித்து அதனுடன் இணைந்து தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதன்போது 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் 9 வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரதி தவிசாளருக்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எல்.எல்.எம். யலால்தீன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் பிரதி தவிசாளராக முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ் 9 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 08 உறுப்பினர்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 06 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி – 01 உறுப்பினரையும், சுயேட்சைக்குழு 01 உறுப்பினரையும் பெற்றுக் கொண்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், எம்எல்எம் ஹிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
(கனகராசா சரவணன்;)
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago