2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடி மாணவர்கள் சாதனை

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், இரு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனரென, அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்கும் எம்.எம்.மஹார் எனும் மாணவன், விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அத்தோடு, தரம் 08இல் கல்வி கற்கும் எம்.ஏ.மாஜித் எனும் மாணவன், தேசிய மீலாத் சிங்கள மொழிப் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தேசிய போட்டியில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X