2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஓட்டோக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள்களைப் பெறுவதற்காக ஓட்டோக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையங்களில் ஓட்டோக்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கேற்ப இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டோக்களை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X