2025 மே 01, வியாழக்கிழமை

ஓட்டோக்குத் தீவைத்த மருமகனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

குடும்பத் தகராறு  காரணமாக, தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான ஓட்டோவைத் தீவைத்துக்கொழுத்திய மருமனை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிபதி ஏ.சீ.றிஸ்வான், இன்று (17) மாலை உத்தரவிட்டார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெலிகொம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  தனது மாமனாருக்குச் சொந்தமான ஓட்டோவை பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு, தலைதறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான குழுவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .