Mayu / 2024 ஜூலை 09 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளர்களுக்கு மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பாண் வழங்கிய ஓப்பந்தகாரரின் ஒப்பந்தத்தை ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் உடனடியாக இரத்து செய்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நோயாளர்கள் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் செங்கலடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியசாலைக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரர், உணவை வழங்கிய கடை உரிமையாளரிற்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை வழக்கு தாக்குதல் செய்து இருவரையம் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நோயாளர்களுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரரின் ஒப்பந்தத்தினை உடனடியாக இரத்து செய்ததுடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அதை உரிய தவணையில் கட்டத்தவறின் 3 மாதகால சிறைத்தண்டனையும் 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் வழங்கி உணவு தயாரித்து வழங்கிய கடை உரிமையாளரை 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் ஒரு மாதகால சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
கனகராசா சரவணன்
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025