2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் வழங்குமாறு பணிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி   

மட்டக்களப்பில் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி  ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு,  அரச சுற்றறிக்கைக்கு அமைய ஏப்ரல், மே மாதம்  வரைக்குமாக,  தலா 25 ஆயிரம் ரூபாய் முற்பணத்தை உடனடியாக வழங்குமாறு, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,  அரச திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு, ஓய்வூதியத்  திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும்வரை இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் அவர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு விடுத்துள்ள  8/2020  சுற்றறிக்கையில், சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விதம்  அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போர்,  தாம் கடைசியாக பணிபுரிந்த திணைக்களத்தின் தலைவரிடம் இதனைக் கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இந்த முற்பண ஓய்வூதியம் பெற்றுக்கொள்வதில் ஏதாவது தடையிருந்தால்,  மாவட்டச் செயலகத்தின் செயலணி இலக்கமான  065-2222235  உடன் தொடர்பு கொள்ளுமாறு, அரசாங்க அதிபர் கலாமதி அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும், இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்குரிய  முற்பண ஓய்வூதியத்தை, உடனடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று பொதுநிருவாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X