2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவு நாள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன்,  பொதுமக்கள் என பலரும் காலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1987ஆம் ஆண்டு 01.28 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைச் சந்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது இறந்தவர்களின் உறவினர்கள், இங்கு கலந்து கொண்டு நினைவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X