2025 மே 09, வெள்ளிக்கிழமை

கொக்கட்டிச்சோலை மக்களுக்கான நீதிமன்ற நடவடிக்கையில் மாற்றம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கொக்கட்டிச்சோலை பகுதி மக்கள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வருகைதரும் வகையில் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலிருந்து தாக்கல் செய்யப்படும் வழக்குகள் யாவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிபதி மா.கணேசராஜா தெரிவித்தார்.

இதுவரை காலமும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்துக்கு சுமார் 20 அல்லது 25 கிலோமீற்றர் தூரம் வரை செல்லும் கொக்கட்டிச்சோலை மக்கள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து  மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் தமது வழக்கு நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதுடன் கொக்கட்டிச்சோலை மக்களுக்கு இலகுவானதும் உடனடி நீதிமன்ற நடவடிக்கை சேவைகளை வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் போக்குவரத்து மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இலகுவான அமைவிடமாகவும் கொக்கட்டிச்சோலையில் இருந்து மிவும் குறைந்தளவான போக்குவரத்து தூரத்தையும் உடைய நீதிமன்றமாக மட்டக்களப்பு நீதிமன்றம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X