Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சின் நிதி உதவி மூலம் சுகாதார நலனை மேம்படுத்தவும் நீர் வளத்தை பாதுகாக்கவும் மட்டக்களப்பு மாவட்ட மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசதி குறைந்த குடும்பங்களுக்கான சுகாதார மேம்பாட்டு செயற்திட்டம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கிராமிய நீர் மற்றும் சுகாதார பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் முதலாம் கட்ட கட்டுமாண பணிகளை பூர்த்தி செய்த 60 பயனாளிகளுக்கு, தலா 10,000 ரூபாய் வீதம் 6 இலட்சம் ரூபாய் பொறுமதியான காசோலைகள், நேற்று திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம் பெற்ற இந்நகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் சமூகவியலாளர் எம்.எஸ்.எம். சறூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago