Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி. யுதாஜித், ஜே.எப்.காமிலாபேகம்
வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள காட்டு யானைகளை ஹபரணைக்காட்டுப்பகுதிக்குக் கொண்டுச் செல்வதற்கான வேலைகளை, வனவிலங்கு பரிபாலனத்திணைக்களத்தின் வைத்தியர்கள்; வெல்லாவெளியில் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக்கிராமங்களில் காட்டு; யானைகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்த தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட செயற்பாட்டின் ஒருபகுதியான யானைகளை வேறு பிரதேசத்திற்குக் கொண்டுச் செல்லும்; நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை போரதீவுபற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களைச் சந்தித்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பத்து நாட்களுக்குள் பிரச்சினைக்குரிய யானைகளை வேறு இடத்திற்கு அகற்றுவது என்றும், அதுவரையில் பாதுகாப்புப்படையினரையும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தினருடன் சேவையில் ஈடுபடுத்துவது என்றும், அதே நேரத்தில் யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்வது என்றும் முடிவுகளை அறிவித்திருந்தார்.
அதன்படி, காடுகள் துப்பரவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நேற்றைய தினம் வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டக்களப்புக்கு வருகை தந்து யானைகளை பிடித்துச் செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் இந்த யானைகளை அகற்றுவார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட வன விலங்கு பரிபாலனத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago