Niroshini / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு - உறுகாமம் - தும்பாலஞ்சோலைப் பிரதேசத்தில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் முகாஜிரீன் மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய கச்சிமுகம்மது உசனார் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டுப்பட்டியொன்றில் கூலித்தொழிலாயாக இருந்த இவர் காட்டுப்பிரதேசத்திலுள்ள பொதுக்கிணறு ஒன்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது யானை வழிமறித்துத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் யானையைக் கண்டதும் நீர்க் கொள்கலனை வீசிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, அந்த யானை குறுக்கு வழியாக வேகமாக ஓடி எதிரே வந்து தாக்கியுள்ளது. இவரது தலை, நெஞ்சு மற்றும் கால் போன்ற இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணகளை மேற்கொண்டதுடன், கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025