Gavitha / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தும்பாலஞ்சோலை பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (30) மாலை, காட்டு யானைத் தாக்கி விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஜின்னா வீதி ஐயங்கேணியைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது முஹம்மது உஸனார் (வயது 54) என்பவரே இச்சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
மாடுகளை வளர்த்து வாழ்வாதாரத்தைக் கொண்டுச் செல்லும் இவர், நீர் எடுப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு வந்த யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025