Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச சபைக்கு உட்பட்ட கொத்தியாபுலை, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மேற்படி கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (08) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் சென்றிருந்தார்.
இந்நிலையில், தங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து தருமாறு மாகாண சபை உறுப்பினரிடம் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக வாகனங்களின் மூலம் இம்மக்களுக்கு குடிநீரை வழங்குமாறு வவுணதீவுப் பிரதேச சபைச் செயலாளர் தவஜோதீஸ்வரி புத்திரசிகாமணியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமைக்குள் இம்மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று மாகாண சபை உறுப்பினருக்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர்; எஸ்.சுதாகர் தெரிவித்தார்.
மேலும், இம்மக்களின் வாழ்விடங்களுக்கு அருகில் குடிநீர்த் தாங்கிகளை வைத்து குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago