Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகரிலுள்ள குடிநீர் போத்தல் மொத்த விற்பனை நிலையமொன்றில்; கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர் போத்தலொன்றில் தூசி காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிலையத்திலிருந்து ஒரு லீற்றர் கொள்ளளவைக் கொண்ட சுமார் 1,600 குடிநீர் போத்தல்களை கைப்பற்றியுள்ளதாக வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை இவ்விற்பனை நிலையத்தில் வாங்கி அருந்த முற்பட்ட பொதுமகன் ஒருவர், குடிநீரில் தூசி படிந்திருந்தமையை அவதானித்துள்ளார். இது தொடர்பில் வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அப்பொதுமகன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாருடன் வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டு, மேற்படி குடிநீர்ப் போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த குடிநீர் விநியோகஸ்தர் மற்றும் குடிநீரை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago