2025 மே 09, வெள்ளிக்கிழமை

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரி கடிதம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில அத்துமீறிய  காணி அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இன்று திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் தெரிக்கையில், 'மட்டக்களப்பு  மாவட்டத்தின்  கல்குடாத்தொகுதியை  அண்டிய  நாவலடி,  வாகனேரி,  புனாணை ஆகிய பகுதிகளில்  வனபரிபாலனத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட  காணிகளை  அத்துமீறி  பொதுமக்கள்  தன்னகப்படுத்துவதை  உடனடியாக நிறுத்த  நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  -கொழும்பு  பிரதான வீதியை  அண்டிய  ஓட்டமாவடி  பிரதேச  செயலக  மக்கள்  பலவந்தமாக    எந்தவித  அனுமதியுமின்றி  தமக்குத் தேவையான  இடங்களில்  வேலி அமைக்கும்  சட்டவிரோதச்  செயலில்  தொடர்ந்து  மூன்று  நாட்களாக  ஈடுபட்டதை காணமுடிந்தது.

இந்த  அத்துமீறிய  காணி  அபகரிப்புக்கு பக்கபலமாக  மட்டக்களப்பு  பிரதியமைச்சர் ஒருவர்  ஒருவர்  செயற்படுவதாகவும்  அவருடைய  தூண்டுதலின்  பெயரில்  இவ்வாறு  எந்தவித  அனுமதியுமின்றி காணி  அபகரிப்பு  இடம்பெறுவதாகவும்  இது  தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X