Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் றோட்டரிக்கழகத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 67 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் சனிக்கிழமை (21) மாலை வழங்கப்பட்டன.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் மொடன் நகரம் மற்றும் ஹைறாத் நகரில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொரு வீடும் 10 பேர்ச் காணியில் 15 இலட்சம் ரூபாய் செலவில் சமையல் அறை உட்பட ஐந்து அறைகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட காணிகளில் இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.டி.ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, நிர்வாக உறுப்பினர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago