Niroshini / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றக் கிராமமான புணானையில், இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் காணி எல்லை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, நேற்று வியாழக்கிழமை சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான புணானையில் போருக்குப் பின்னர் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு தலமாக அந்த இடம் தற்போது விளங்குகின்றது.
அசாதாரண சூழ்நிலையின் முன்னர் குறித் இடத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் இருந்ததாக புணானை பஞ்சாமாகா விகாராதிபதி அல்லேவெ பித்தாலங்கா தேரோ தெரிவித்தார்.
இந்த பிரதேசத்தில் ஐந்து சிங்கள குடும்பங்கள் வழ்ந்ததாகவும் பௌத்த வழிபாட்டு தலம் எதுவும் இருக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
இரு வழிபாட்டு தலங்களும் ஒரே காணி எல்லைக்குள் அமைந்திருப்பது தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் இல்லை என பௌத்த மதகுரு தெரிவித்தாலும் அதனை அந்த கிராமத்திலுள்ள தமிழர்கள் விரும்பவில்லை.
இவ்விடயம் தொடர்பாக ஆராயும் கூட்டம் புணானையில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பனிர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, வாகரைப் பிரதேச செயலக காணி அதிகாரிகள், புணானை பஞ்சாமாகா விகாராதிபதி அல்லேவெ பித்தாலங்கா தேரோ, கிங்கள மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

3 minute ago
18 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
19 minute ago
20 minute ago