Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாணத்துக்கான விசேட கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலக ரீதியாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்களுடன் இணைந்து செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், அரசாங்கத்துக்கான வருவாயினை அதிகரித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
1972ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காணி சீர்திருத்தத்துக்கான செயற்றிட்டம் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இவ் ஆணைக்குழுவானது உண்மையில் அதிகளவான காணிகளை வைத்திருப்பதனைத் தடுப்பதுடன், காணிச் சமமின்மையைச் சரிசெய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் காணி இராஜாங்க அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago