Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,நடராஜன் ஹரன்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எல்லைப் பிரதேசங்களுக்கு செவ்வாய்க்கிழமை(13)நேரில் சென்ற அரச அதிகாரிகள் காணிப் பிரச்சினை தொடர்பாக பார்வையிட்டதுடன் விசாரணையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமமான பாவாபுரம் வயற்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நெற்காணிகளில் தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெஹெரகல (மாந்தோட்டம்) கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அத்துமீறி நெற்செய்கையில் ஈடுபடுவது குறித்து ஆராயப்பட்டது.
மேலும், தமிழ், முஸ்லிம் மக்களை அப்பிரதேசத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து அடாவடித்தனங்களில் ஈடுபடுவது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாவாபுரம் வயற்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழுவினர் பிரச்சினைக்குரிய குறித்த காணிகளின் உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அரச அனுமதியின்றி துப்பரவு செய்யப்பட்டிருந்த காணிகளையும் பார்வையிட்டனர்.
அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களை பாவாபுரம் பகுதியிலுள்ள அவர்களது காணிகளுக்குள் நுழையவிடாமல் தடுப்பது மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்பில் இருதரப்பினரோடும் கலந்துரையாடி சமரசம் செய்ததுடன், தமது காணிக்கான முறையான அத்தாட்சிப்பத்திரம் வைத்துள்ள எவரும் அதில் முறையாக நெற்செய்கையை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும்,இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும்; குறிப்பிட்டனர்.

7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago