Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
அழிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட ஓர் இனத்தின் பிரதி நிதிகளாக நாங்கள் இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
வாகரை பிரதேசம் மாங்கேணியில் பெரேயா ஜெப வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை (25) நண்பகல், பாஸ்ரர் ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற நத்தார் தின ஆராதனையின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்;ட மக்கள் கடவுளை நோக்கி பலவாறும் வேண்டினார்கள்.
உங்கள் வேண்டுதல்களை கேட்டு இறைவன் அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். எமக்கு இப்போது கிடைத்துள்ள அமைதி நிலைத்திருக்க வேண்டும்.
இழைக்கப்பட்ட அநிதிகளுக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.அதேவேளையில் எமது ஆயிரக்கணக்கான மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு மீளளிக்கப்படமால் உள்ளது. இந்த காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.
இதேபோல் தமிழ் கைதிகள் அனைவரும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். வாகரை பிரதேசம் உட்பட எமது வடகிழக்கு பகுதிகள் கடந்த கால யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்க்பட்ட பகுதிகளாகும்;.
மூன்று தசாப்த காலமாக எமது தேசத்திலே யுத்தம் நடைபெற்றதை நாம் அறிவோம். இந்த யுத்தத்தின் விளைவாக பல இழப்புக்களை நாம் சந்தித்துள்ளோம்.
150,000 க்கும் மேற்பட்ட எமது உறவுகள் உயிரிழந்துள்ளார்கள். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் தாய் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்னும் தென்னிந்திய முகாம்களில் 125,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். பலர் அங்கங்களை இழந்து உடமைகளை இழந்து இருப்பிடங்களை இழந்து அனாதைகளாக நாங்கள் மாற்றப்பட்ட காலத்தை நாம் அறிவோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago