Suganthini Ratnam / 2016 ஜூன் 15 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் செவ்வாய்க்கிழமை (14) மாலை காணாமல் போன இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆரையம்பதி,; கர்பலாக் கிராமத்தில் அமைந்துள்ள வெற்றுக்காணியிலிருந்து அன்றிரவு ஒன்பது மணியளவில் இந்தக் குழந்தை மீட்கப்பட்டது.
குறித்த காணியில் இந்தக் குழந்தை நிற்பதைக் கண்ட சிலர், குழந்தையை மீட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த இந்தக் குழந்தையான எம்.ஜே.ஜியாஸ், திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனை அடுத்து, பெற்றோரும் உறவினரும் குழந்தையைத் தேடியுள்ளனர். இருப்பினும், குழந்தை கிடைக்கவில்லை.
இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் சென்றுள்ளனர். இதன்போது, மீட்கப்பட்ட இந்தக் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், குழந்தை மீதான கவனம் தொடர்பிலும் அறிவுறுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரiணைகளை மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025