2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் சனிக்கிழமை (17)  முன்னெடுக்கப்படவுள்ள அடையாள உண்ணாவிரதப்  போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அழைப்பு விடுத்துள்ளார்.

சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04 மணிவரை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் முன்றலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கட்சி பேதங்களை மறந்து அனைவரையும்  கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'பல வருடங்களாக எவ்வித சட்ட நிவாரணமுமின்றி சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல்க் கைதிகளின் விடியலுக்கான இறுதி முயற்சியாக எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X