Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எம்.அஹமட் அனாம்,எஸ். பாக்கியநாதன்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதியின் நிர்மாணப்பணிகளை இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
இன்று நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். குற்றம் செய்த பலர் இன்று வெளியில் சுதந்திரமாக திரிய இந்த தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் இன்று சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.
அவர்களின் குடும்பங்கள் பல கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்துள்ளன.
இந்த நிலையில் அரசாங்கம் உடனடியாக சிறைகளில் பல வருடங்களாக அரசியல் கைதிகளாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு கொடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மனிதாபிமானம் காட்டி அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
இதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை,மட்டக்களப்பு சிறைக் கைதிகளை இன்று வியாழக்கிழமை பாபார்வையிட்ட கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறைக் கைதிகளின் விடுதலைக்காக பல்வேறு முன்னெடுப்புக்களைச் செய்துள்ளன. நீதிமன்ற விசாரணை நடைபெறும் கைதிகளுக்கு விரைவாக விசாரணை செய்தும் ஏனையவர்களுக்குமாகச் சேர்த்து பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதற்காக கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இன்று நீதியமைச்சரோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சிறைக் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் சனிக்கிழமை (17) மாகாண சபை உறுப்பினர்கள் பொது அமைப்பினருடன் இணைந்து மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) திருகோணமலை மாகாண சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நடத்தவுள்ள அடையாள உண்ணவிரத போராட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
52 minute ago
1 hours ago