Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கடலில் நீராடுவது தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் இன்று வியாழக்கிழமை போடப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தால் இந்த அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டன.
எச்சரிக்கை என்று தலைப்பிடப்பட்டு, ஆழமான கடற்பகுதியில் நீராடுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக மும்மொழிகளிலும் அந்த எச்சரிக்கை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் காத்தான்குடி கடற்கரையில் ரெலிகொம் சந்தி, கடற்கரை வீதிச் சந்தி, நதியா கடற்கரைச் சந்தி ஆகிய இடங்களில் போட்டப்பட்டுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் காத்தான்குடிப் பிரதேச செயலக திட்ட உத்தியோகஸ்தர் ஜப்ரியல் மிக்கேல் தெரிவித்தார்.
காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை போடுமாறு அண்மையில் நடைபெற்ற காத்தான்குடிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025