2025 மே 08, வியாழக்கிழமை

காத்தான்குடி நகரசபையை 12 வட்டாரங்களாக பிரிக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டுமெனக் கோரி எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவிடம் மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில், 'எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், காத்தான்குடி நகரசபை தற்போது 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.  

கடந்த ஆட்சிக்காலத்தின்போது, காத்தான்குடி நகரசபை 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு அது முன்மொழியப்பட்டு அங்கிகரிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்பொழுது இந்த நகரசபை 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு வர்த்தமானியில் உள்வாங்கப்பட்டுள்ளது.

28,000 வாக்காளர்களையும் சுமார் 48,000 மக்கள் தொகையையும் கொண்ட காத்தான்குடி நகரசபையை ஆகக் குறைந்தது 12 வட்டாரங்களாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற  கோரிக்கையை எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் அசோக பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் பொரள்ளஸ் ஆகியோர் முன்னிலையில் முன்வைத்துள்ளேன்.

மேலும், இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் சுமார் 14,000 மக்கள் தொகையைக் கொண்ட பிரதேசங்களுக்கு 11 மற்றும் 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு உறுப்பினர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. காத்தான்குடியை விட குறைவான சனத்தொகை மற்றும்; குறைவான நிலப்பரப்பைக் கொண்ட பல பிரதேசங்களுக்கு கூடுதலான வட்டாரங்கள் பிரிக்கப்பட்டடுள்ள சூழ்நிலையில் காத்தான்குடி நகரசபை ஆகக்குறைந்தது 12 வட்டாரங்களாக பிரிக்கப்படும்போதே, எதிர்காலத்தில் இலகுவாக தங்களுடைய பணிகளை செய்ய முடியும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X