Suganthini Ratnam / 2016 மே 10 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் அவ்வீதியின் மத்தியில் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளில் சிலவற்றை அகற்றுவதற்கு காத்தான்குடி நகர சபைக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திங்கட்கிழமை (09) அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வீதியின் மத்தியில் சில இடங்களில் காணப்படும் பூச்சாடிகள், வீதி விபத்துகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பாக அமைவதாக அண்மையில் நடைபெற்ற காத்தான்குடிப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினதும் பிரதேச செயலாளரினதும் பரிசீலனை அறிக்கை கிடைத்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம், ஹிஸ்புல்லாஹ் மண்டபம், குர்ஆன் சதுக்கச் சந்தி ஆகிய இடங்களிலுள்ள பூச்சாடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி நகர சபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரனுக்கு திங்கட்கிழமை (09) அனுப்பிய கடிதத்தின் மூலம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago