2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர்களிடம் விசாரணை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர்களிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை செய்துள்ளதாக அச்சம்மேளனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'குவைட் சிற்றி' எனப்படும் வீட்டுத்திட்டத்துக்கான காணிக் கொள்வனவு தொடர்பில் சம்மேளனத் தலைவர், செயலாளர், உப தலைவர் ஆகியோரிடம் மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

சுனாமி அனர்த்தம் காரணமாக காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் குவைத் நாட்டின் நிதி உதவியுடன் 70 வீடுகளைக் கொண்டதாக 'குவைட் சிற்றி' எனப்படும் வீட்டுத்திட்டம்  2007ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இதன் ஒவ்வொரு வீடும் 05 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்துக்கான காணியைக் கொள்வனவு செய்வதற்காக காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் சேகரிக்கப்பட்ட நிதியை, இந்த வீடுகளை நிர்மாணித்த அரசியல் தரப்பினரிடம் வழங்கியதாக தெரியவருகின்றது. அந்த நிதி தொடர்பாகவே விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X