Sudharshini / 2016 மே 07 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் புதிய வர்த்தகம் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத் தலைவர் றவூப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மட்டக்களப்பின் பிரதான வர்த்தக நகரான காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கமொன்றை அமைக்க, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்ததுக்கு அமைய இந்த புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவுத் தொழுகையைத் தொடர்ந்து, காத்தான்குடி 01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. புதிய வர்த்தக சங்கத்தின் தலைவராக வர்த்தகர் ஏ.ஜி. அஜ்வத் தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக வர்த்தகர் எம்.எம்.ஏ. சித்தீக், பொருளாளராக வர்த்தகர் எம்.ஐ.எம். மக்பூல் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். இNவேளை, உப-தலைவர்களாக ஏ.எல்.அஸ்ரப், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட், உப-செயலாளராக சி.எம்.எம். மர்சூக் உட்பட 35 வர்த்தகர்களைக் கொண்ட நிருவாக்குழு தெரிவுசெய்யப்பட்டது.
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago