2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடியில் போஷாக்கு குறைவால் 656 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேச செயலாளர்; பிரிவில் போஷாக்கு குறைவால் பாதிக்கப்பட்டுள்ள  656 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.

இதன்போது, 05 வயதுக்கு குறைந்த 223 குழந்தைகள் போஷாக்குக் குறைவால்; பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 'போஷாக்குத் தொடர்பான பல்துறைசார் செயற்பாட்டுத் திட்டம்' தொடர்பில்; நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 கிராம அலுவலர்  பிரிவுகளிலும் சுகாதார அலுவலக உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்போது, இவை தொடர்பில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போஷாக்கு குறைவால்; பாதிக்கப்பட்டுள்ள  குடும்பங்களில் 316 குடும்பங்கள் பொருளாதார ரீதியான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். குறைந்த போஷாக்குடைய உணவை உட்கொள்ளும் 311 குடும்பங்கள் உள்ளன. தொற்றா நோயால் 02 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பராமரிப்புக் குறைந்த 21 குடும்பங்களும் உள்ளன. மேலும், உணவுப் பாதுகாப்பு இல்லாத 06 குடும்பங்களும் உள்ளன.

போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 34.63 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகும் எனவும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு இந்த போஷாக்குத் தொடர்பான பல்துறைசார் செயற்பாட்டு திட்டம் நாடு பூராகவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X