Princiya Dixci / 2016 மே 06 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பின் பிரதான வர்த்தக நகரான காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்றை அமைக்க காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது விடயமாக மேற்படி சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பில் தெரிவித்துள்ளதாவது,
காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டுள்ளதால், சம்மேளனத்தின் அனுசரணையோடு வர்த்தக சங்கம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
எனவே, இதன் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை இஷா (இரவு)த் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி 01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago