2025 மே 07, புதன்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலைக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று  வியாழக்கிழமை மாலை விஜயம் செய்த சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளார் நாயகம் பாலித மஹிபால,  இவ்வைத்தியசாலையில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றிப் பார்வையிட்ட பணிப்பாளார் நாயகம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்துகொண்டார்.

எதிர்காலத்தில் இந்த வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X