2025 மே 12, திங்கட்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் 106 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலைக்கு குறைந்தது 18 வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் 04 பேர், தாதி உத்தியோகஸ்தர்கள் 30 பேர், மருத்துவ மாதுக்கள் 06 பேர், கண்காணிப்பாளர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 30 பேர், மருந்தாளர்கள் 05 பேர் தேவைப்படுகின்றனர். தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறையானது திருப்திகரமான வைத்திய சேவைக்கு சவாலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது இவ்வைத்தியசாலையில் 110 ஆளணியினரே கடமை புரிவதாகவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X