2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடி வர்த்தகர் சங்கத்தின் பொதுக் கூட்டம்

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி வர்த்தகர் சங்கத்தின் பொதுக் கூட்டம், அதன் தலைவர் ரவூப் ஏ மஜீத் தலைமையில்நேற்றிரவு காத்தான்குடி மீரா ஜும் ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது.

காத்தான்குடி வர்த்தகர் சங்கத்தின் தலைவராக ஏ.ஜே.அஜ்வத், செயலாளராக எம்.எச்.எம்.சித்தீக், பொருளாளராக எம்.ஐ.எம்.மக்பூல் ஹாஜியார் உப தலைவர்களாக ஏ.எல்.அஸ்ரப், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், உப செயலாளராக சி.எம்.எம்.மர்சூக் உட்பட 35 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி,

“காத்தான்குடியில் வர்த்தகர் சங்கத்தினை மீள புனரமைப்பதில் சம்மேளனம் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளது.

காத்தான்குடியை வர்த்தக மையப்பகுதியாக மாற்றுவதில் இந்த வர்த்தகர் சங்கம் பாடுபட வேண்டும். இந்த சங்கத்தின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் உதவியாக இருக்கும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X