2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், 21 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தெரிவாகிச் சாதனை படைத்துள்ளனர் என கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தெரிவித்தார்.

இக்கல்லூரியில் கணி;தப் பிரிவில் இரண்டு மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் இரண்டு மாணவர்களும் சட்டத்துறைக்கு இரண்டு மாணவர்களும் கலைப் பிரிவில்  15  மாணவர்களும் தெரிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள வடிவேல் வசந்தலா மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தையும் செல்வன் அருளானந்தம் சிலுக்சன் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X