2025 மே 07, புதன்கிழமை

குப்பை கொட்ட வேண்டாம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் கோவில் வீதியில் மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்படுவதினால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, இங்கு குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு கோரி மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைச் செயலாளர் வசந்தகுமாரன் யாகேஸ்வரிக்கு களுதாவளை பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.

அக்கடித்தில், 'களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் கோவில் வீதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில்  தொடர்ச்சியாக பிரதேச சபையினால் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சில வேளைகளில் மலக்கழிவுகளும் இவ்விடத்தில் கொட்டப்படுவதை நாங்கள் அவதானிக்கிறோம். இதனால், நுளம்பு, ஈக்களின்; பெருக்கமும் உள்ளதுடன், காற்று மூலமாக நோய்க்கிருமிகள் பரவும் அபாயமுள்ளது. இங்கு துர்நாற்றம் வீசுகின்றது. மேலும், இங்குள்ள மக்கள் வாந்திபேதி உள்ளிட்டவற்றினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் சமுத்திரத் தீர்த்தமாடச் செல்லும் பிரதான பாதையை மறித்கே குப்பைகள் கொட்டப்படுகின்றன. எனவே, எங்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இவ்வாறு குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்தி உரிய தீர்வை எதிர்பார்த்து வேண்டுகோள் விடுக்கிறோம்'  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X