2025 மே 08, வியாழக்கிழமை

குப்பை கொட்டுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ.சக்திவேல், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுதாவளை கடற்கரையை அண்டிய பகுதியில் மண்முனை  தென்எருவில்பற்று பிரதேச சபையினால் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து, களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசபைக்கு முன்னால் அப்பகுதி பொதுமக்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்டனர். 

இப்பிரதேசத்திலுள்ள 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்த 5 வருடங்களாக இவ்விடத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

ஏற்கெனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் இன்றுவரை தீர்வு எட்டப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் நந்தலால் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் திருமதி யா.வசந்தகுமாரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
 
இதன்போது, இன்றிலிருந்து குறித்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படமாட்டாது எனவும் இதுவரை கொட்டப்பட்டு வந்த குப்பைகளை, எதிர்வரும் 15 நாட்களுக்குள் சுத்தம் செய்வதாகவும் பிரதேச சபைச் செயலாளரினால் கடிதம் வழங்கப்பட்ட பின்னரே  ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X