Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காய்ச்சல் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த இர்பான் ஆயிஷா (வயது 7) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறுமி கடந்த 03 நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் இன்று வியாழக்கிழமை காலையே சிகிச்சைக்காக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிறுமிக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பதுடன், இந்தச் சிறுமியின் உயிரிழப்புத் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
இந்தச் சிறுமி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்தார்.
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago