2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிரானில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்திலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், நேற்று திங்கட்கிழமை  கிரான் கமநல கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது மேய்ச்சல்தரைப் பிரச்சினை, உரப் பிரச்சினை, குளங்கள் புனரமைக்கப்படல் மற்றும் கால்நடைகள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியன தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கத்திடம் முன்வைக்கப்பட்டது.
இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக  தாமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அதிலுள்ள சிக்கல் நிலைகள், அதனையும் தாண்டி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பிலும் மக்களுக்கு அமைச்சர்; தெளிவுபடுத்தினார்;.

இங்கு மேலும் தெரிவித்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச அரசாங்கங்களினால் கூடுதலான பணம் இப்பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அன்றிருந்த நிதி முகாமைத்துவம் மிகவும் மோசமாக இருந்;தமையால் அதன் பலாபலன்களை முழுமையாக நாம் அனுபவிக்க முடியாமல் போனது.

இவ்வருடம் ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தில் இரு அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்று 09 மாத காலங்களுக்குள் நான் விவசாய அமைச்சர் என்கின்ற ரீதியில் எம்முடைய விவசாயகளின் நலன் தொடர்பாக அடித்தளத்தை நாம் இட்டிருக்கின்றோம்

நாம் மாகாண சபையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தாலும் வரவு- செலவுத் திட்டத்தில் பழைய வரவு -செலவுத் திட்டத்தினை அங்கிகரித்துக் கொண்டுதான் வந்தோம். அதில் எம்முடைய திட்டங்களை உட்புகுத்துவதற்கு முடியாமற்போனது. ஆனால், இனிவரும் ஆண்டில் எமது பல திட்டங்களை உட்புகுத்தி எமது பிரதேசங்களுக்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள முடியும்' என்றார்.

'இந்தப் பிரதேசதத்தில் இடம்பெறும் பாரிய பிரச்சினையாக இருப்பது மேய்ச்சல்;தரைப் பிரச்சினை. இது தொடர்பில்  கால்நடை வளர்ப்பாளர்களுடன் இணைந்து  நடவடிக்கைகளை மேற்;கொண்டு வருகின்றேம் இதனை அந்த கால்நடை வளர்ப்பாளர்களும் நன்கு அறிவார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X