2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கூரை வழியாக வீடு புகுந்து பணம் திருட்டு

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் நேற்று, ஆளில்லாத தருணம் பார்த்து வீடு புகுந்த திருடன், அங்கிருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தைச் திருடிச் சென்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் முன்பள்ளியில் அசிரியராக கடமையாற்றிவரும் நிலையில், சம்பவத்தினத்தன்று வழமை போன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு முன்பள்ளிக்குச் சென்று விட்டு பாடசாலை விட்டு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோதே பணம் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X