Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இவர்களின் பிரச்சினைகள் தொடர்பான மகஜரை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம்; அன்றையதினம் கையளிக்கவும்; தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நீண்டகாலமாக கால்நடை வளர்ப்பாளர்கள், பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்டக் கால்நடை வளர்ப்பாளர் மற்றும் பால் பண்ணையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சனிக்கிழமை (07) மட்;டக்களப்பிலுள்ள அவரது அவலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிக பால் உற்பத்தியை பெறக்கூடியவாறு பசுக்களை பெற்றுக்கொள்ளுதல், கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகளை அபிவிருத்தி செய்தல், இதற்காக குளங்களை அபிவிருத்தி செய்தல், கால்நடைப் பண்ணையாளர்கள் போக்குவரத்துச் செய்யக் கூடியவாறு வீதிகளை அபிவிருத்தி செய்தல், மேய்ச்சல் தரைக்காக பிரதேச மாவட்ட மட்டத்தில் அடையாளம் இடமிடப்பட்டு 18.8.2010இல்; தீர்மானிக்கப்பட்ட காணிகளை வர்த்தமானிப் பிரகடனம் செய்தல். அல்லாவிடின், கிழக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்திடமிருந்து 27,000 ஹெக்ரேயர் மேய்ச்சல் தரைக் காணியை குத்தகை அடிப்படையில் பெற்று கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்த அனுமதித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago