Thipaan / 2016 ஜூன் 25 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் சகதிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை (25) நண்பகல், அவர்கள் நான்கு பேரும் உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார்.
அங்கிருந்த ஏனையவர்கள், சகதிக்குள் மூழ்கியவரைக் கயிற்றால் கட்டியிழுத்து கரைசேர்த்து, கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டமாவடி மீறாவோடையைச் சேர்ந்த நுபீர் முஹம்மத் இர்பாஸ் (வயது 22 ) என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த ஆயித்தியமலைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago