2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கெளரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரக்கிளை மக்கள் வங்கியில் 'சிசுஉதான' கணக்கினை வைப்பு செய்து புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது இப்பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து மாவட்ட மட்டத்தில் 189 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்ற முகமட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் என்ற மாணவனுக்கு 15,000 ரூபாய் பெறுமதியான காசோலையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலித்தூர் மற்றும் நகரக்கிளை மக்கள் வங்கி முகாமையாளர் .கோமளாதேவி யோகநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X